Friday 3 June 2011

ருசியான காபி!!!


தினமும் நான் எழுந்தவுடன் முதல் வேலையாக காபி போட்டு சுட சுட செய்திகள் படித்துக்கொண்டே   குடிப்பது வழக்கம். குடிக்கும் போதே பல விஷயங்களை 'அய்யய்யோ', 'அடப்பாவிங்களா', 'இது நல்லா இருக்கே' என்று எனக்கு நானே சொல்லி கொண்டு குடித்து முடிப்பது வழக்கம். இந்த வழக்கத்தில் சில மாறுதலும் உண்டு, ஞாயிறு மட்டும் காபி குடித்து விட்டு தான் எழுவேன் அதுவும் ஒரு சுகம்.

அனால் இன்று என் வீட்டில் நடக்க இடம் இலலாமல் விருந்தினர்கள் வந்திருக்கிறர்கள், அவர்கள் உண்மையில் விருந்தினர்கள் அல்ல என் மாமியார், மாமனார், நார்தனார் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் தான். இந்த காசு பார்க்கும் வாழ்கையில் அதாவது சென்னை வாழ்கையில் அவர்களும் விருந்தினர்கள் ஆகிவிட்டனர்.

காலை எழுந்தஉடன் பால் காச்சி வழக்கம்போல முதலில் என்னக்கு காபி போட்டு வைப்பதற்குள் என் மாமியார் எழுந்து விட்டார், பின் நார்தனார், பின் மாமனார், ...,  ஒவ்வொருவருக்காய் காபி போடு கொடுத்து விட்டு, பின் பசங்களுக்கு boost , pediasure  எல்லாம் கலந்து கொடுத்து விட்டு வந்து செய்தித்தாள் படிக்க அமர்தேன். எல்லாரும் எழுந்த பிறகு எழுவது தான் என் கணவரின் வழக்கம். எழுந்தவுடன் "ஓஓஓஓய்ய், குட் மோர்னிங், நீ காபி குடிச்சியா"  என்றார். "ம்ம்ம் நான் குடிசிட்டேங்க, உங்களுக்கு கொண்டு வரவா", என்ற படியே காபியை கலக்க துவங்கி விட்டேன். மனதில் ஒரு பட்டாம்பூச்சி என்ன ஒரு பரவசம் எதுக்குன்னு பாக்குறீங்கள? அவர் வீட்டார் முன்னிலையில் அம்மா கோபித்து கொள்ளுவாளோ அப்பா தவறாக நினைப்பரோ என்று எண்ணாமல் என்னை பற்றி கேட்டது என்னக்குள் அப்படி ஒரு சந்தோசம் பரவ காரணம். நான் மிகைபடுதவில்லை, நாம் தனியே இருக்கும் போது எவ்வளவு அக்கறையாய் இருந்தாலும் அது பெரிதாக இருக்காது, அவர் சொந்தங்கள் முன்னிலையில் நம்மை பார்த்துக்கொள்ளும் போது அதில் எதோ ஒரு கூடுதல் சுகம். என்னக்கு தெரிந்த வகையில் ஆண்கள் அதில் எதிர்மறை!!

அவருக்கு காபி கொடுத்து விட்டு நான் மெல்ல வந்து என் காபியை குடிக்க துவங்கினேன், சூடு இல்லை, ஆடை படிந்திருந்தது, எழுந்து சென்று சுடவைக்க சோம்பேறித்தனம். பரவாயில்லை என்று கொள்ளை பசி சொல்லியது, நானும் குடித்தேன். குடிக்கும் போது ஏனோ நினைவுவந்தது : "உன் காபியில் ஏதோ ஸ்பெஷல் இருக்கு" என் நார்தனர் ஆசையாய் கூறியது, "உன் கையாள காபி குடிச்ச்சத்தான்மா எழுந்திரிக்கவே மனசு வருது" என் கணவர் அடுத்த காபிக்கு அடி போட்டது, "இது நம்ப ஊரு காபி பொடில போட்டது தானே" மறைமுகமாக என் மாமனார் பாராட்டியது. அந்த காபி குடித்து முடிக்கும் போது தான் உணர்தேன்  ஆறிய  காபியிலும் ருசி இருப்பதை! என் மனதில் திருப்தி படர்திருப்பதை! நான் நேசத்திற்கு அடிமை ஆகி இருப்பதை!

No comments:

Post a Comment