Tuesday 7 June 2011

காளிபிலோவேர் தூள் பஜ்ஜி / கோபி மஞ்சுரியன்

நான் கொடைக்கானலுக்கு என் நண்பர்களுடன் சென்றிருந்தேன். நாங்கள் தங்கிஇருந்தது ஒரு தனி வீடு அதில் சமயல் ஆட்கள் மட்டும் இருப்பார்கள் , நமக்கு வேண்டியதை சுட சுட செய்து தருவார்கள்.  அவர்கள் செய்த அனைத்தும் சுவையாக இருந்தது. அதீத குளிரில் சுட சுட பரிமாறியதால் அப்படி இருந்ததா இல்லை சுற்றி பார்த்து விட்டு வந்த உடன் களைப்போடு உன்றதால் அப்படி சுவையாக இருந்ததா என்று தெரிய வில்லை.  அனைத்தையும் அவர்கள் பத்து நிமிடத்துக்குள் செய்து விடுகிறார்கள். அவர்களிடம் இருந்துதான் கோபி மஞ்சுரியன் கத்துக்கொண்டேன், தைரியமாக செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:


காளிபிலோவேர் - 1 பூ.
மைதா மாவு - 1 கரண்டி
சோள மாவு - 1 கரண்டி
இஞ்சி பூண்டு அரைத்தது - 2 தேக்கரண்டி
சக்கரை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெங்காயத்தாள் - சிறிதளவு
நறுக்கிய பூண்டு - 1 கரண்டி (அதிகமாக சேர்த்தல் சுவை கூடுதலாக இருக்கும்)
சோயா சாஸ் - 2  தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2  தேக்கரண்டி
எண்ணெய் - வருக்கும் அளவு
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி


செய்முறை: 

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்த நீரில் காளிபிலோவேர் பந்தை போட்டு மூடிவிடுங்கள், இதை பத்து நிமிடம் விட்டுவிடுங்கள். இடைப்பட்ட நேரத்தில் மாவு தயரித்து வைத்து கொள்ளலாம் .

மைதா மாவு, சோள மாவு, இஞ்சி பூண்டு அரைத்தது, சக்கரை, உப்பு இவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி கலந்துகொள்ளுங்கள். பஜ்ஜி மாவு பதத்தில் இருக்கட்டும். சிறிய கடாயில் என்னை ஊற்றி அடுப்பில் சுட வையுங்கள். என்னை காய்வதற்குள், காலிப்ளவரை சிறு சிறு பூக்களாக உதிர்த்து கொள்ளுங்கள். பின் பூக்களை கலந்துவைத்த மாவில் முக்கி எண்ணையில் போட்டு சிவக்க வரும்வரை வறுத்து எடுங்கள். இந்த வறுவல் சுவையாக இருக்கும். குழந்தைகள் சாப்பிடும் வகையில் இனிப்பாகவும் இருக்கும்.

மேலும் ருசிசேர்க்க, ஒரு வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயத்தையும், பூண்டையும் போட்டு நன்றாக வதக்கி அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும், இத்துடன் வருத்த காளிபிலோவேர் சேர்த்து கிளருங்கள். நன்றாக கலந்ததும் வெங்காயத்தாள், மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி உடனே இறக்கிவிடுங்கள். இப்போது கோபி மஞ்சுரியன்  ரெடி, தவறாமல் பிறருக்கு கொடுத்து டெஸ்ட் செய்துவிட்டு நீங்கள் சாப்பிடுங்கள் :) மறக்காம ருசியான காபி போட்டு குடிச்சி கிட்டே இதையும் சாப்பிடுங்க.


No comments:

Post a Comment