Monday 20 June 2011

""அத்த்த்ததத...""

"ஏன்தான் இந்த காலத்து பசங்களுக்கு பெரியவங்கள மதிக்கனும்ன்னே தெரிய மாட்டேங்குதோ. மொதோ நாள் காலேஜ் போரவ வீட்டுக்கு சீக்கிரம் வருவோம், என்ன நடந்துதுன்னு சொல்லுவோம்னு இல்லாம எங்க ஊரசுத்திகிட்டு இருக்காளோ தெரியல. ஏதாவது கேட்டா எடக்கு மொடக்கா பதில் சொல்ல வேண்டியது" என்று புலம்பிக் கொண்டே அடுப்பாங்கறையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் சொர்னம்.

வாசலில் சத்தம் கேட்க்க எட்டிப்பார்த்தாள் அங்கே ரேவதி இரு தோழிகளுடன் வருவதை பார்த்து தன் கோவத்தை சற்று ஆறப்போட்டுவிட்டு கஷ்டப்பட்டு சிரித்தபடியே வெளியே வந்தாள்.

"அம்மா இங்க பாருங்க எனக்கு புதுசா ரெண்டு பிரண்ட்ஸ் கெடச்சிருக்காங்க நேஹா, கயல்விழி. இவங்க ரெண்டு பேருமே பக்கத்து தெருதாம்மா, இனிமே நீ என்ன பத்தி ஈஸியா துப்புத்துலக்க முடியும்" நக்கலாக சிரித்தாள்.

"ஹாய் ஆன்ட்டி" என்று முடித்துக் கொண்டாள் கயல்விழி.

"ஹாய் ஆன்ட்டி, நான் நேஹா. எங்க அம்மாவும் அப்பாவும் தாலுக்கா ஆபீஸ்ல வேலை பாக்குறாங்க. எனக்கு பிரண்ட்ஸ்னா ரொம்ப புடிக்கும் அதுவும் ரேவதியை ரொம்ப புடிச்சிடுச்சு அதான் ஒடனே வந்து வீட்டையும், உங்களையும் பாத்துட்டு போலாம்னு வந்தேன். நான் படிச்சதெல்லாம் சென்னை தான், அதனால எல்லோர்கிட்டயும் சகஜமா பழகீடுவேன். என்னோட பிரண்ட்ஸ் எல்லோரும் எங்க அம்மாவுக்கும் பிரண்ட்ஸ் ஆன்ட்டி. நீங்களும் கூடிய சீக்கிரம் எங்க வீட்டுக்கு வரனும் ஆன்ட்டி."  பேசிமுடித்துவிட்டு பதிலுக்காக காத்திருந்தாள் நேஹா.

மழலையின் இனிமையும் முதுமையின் அனுபவமும் ஒன்றுசேருவது கடினமே. அனால் நேஹாவின் பேச்சையும் செய்கையும் பார்த்து அது இரண்டும் ஒன்று சேர்ந்ததாகவே சொர்னம் உணர்ந்தாள். கொஞ்சம் அதீதமாகவே நேஹாவை பிடித்திருந்தது. அதிலிருந்து மீண்டு "அதுக்கென்னம்மா கூடியசீக்கிரம் வந்துட்டா போச்சு" என்று சொல்லிக்கொண்டே அவள் வேலையை தொடர ஆரம்பித்தாள்.

தோழிகள் மூவரும் தங்கள் பள்ளிக்கூட நாட்களை பற்றியும், பிடித்தது, பிட்டிக்காதது, எதிர்நோக்குவது என்று பல விஷயங்களை பேசி என்றுமே பிரியா நடப்பை உருவாகிக் கொண்டிருந்தார்கள். அது என்னவோ சொர்னத்திற்கு நேஹா பேசிய அனைத்தும் எளிமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் தோன்றியது. ஆனால் நேஹாவிற்கு திடீர் திடீர் என்று வரும் இருமல் சத்தம் மட்டும் உறுத்திக்கொண்டே இருந்தது. அதனால் அவள் மனம் பேச்சில் ஒன்றுபட மறுத்தது, பேச்சை நிறுத்திவிட்டு ரேவதியிடம் "நீ கல்லூரியில் சொன்ன பாட்டியா அது, அவுங்களுக்கு என்ன அச்சு ஏன் இருமிகிட்டே இருக்காங்க"

"அமாம் டி, அவுங்க தான். ரொம்ப ஒடம்பு முடியல, முதியோர் இல்லத்திலே மருந்து கொடுத்து இருக்காங்க அத சபிடாம சும்மா இருமிகிட்டே இருக்காங்க. எனக்கும் பேசும் போது அது தான் உறுத்திகிட்டே இருந்துது."

நேஹா சற்று சிந்தித்து விட்டு ஏதோ நியாபகம் வந்தவளாய் அடுப்பாங்கறைக்கு எழுந்து சென்றாள். அங்கே சொர்னம் மாவு அரைத்துகொண்டு இருப்பதை பார்த்து "என்ன ஆன்ட்டி ரொம்ப வேலையா, கொஞ்சம் சுடுதன்னி போடணும் பாத்திரம் எங்க இருக்கு? "
"நானே போட்டு தரேன்மா, நீ போய் பேசிக்கிட்டு இரு"
"இல்ல ஆன்ட்டி உங்களுக்கு எதுக்கு சிரமம், நான் பார்த்துக்குறேன்" என்று சொல்லி அவள் பதிலுக்கு எதிர் பார்க்காமல் உள்ளே சென்று வெண்ணீர் போட்டு, அதிலே கொஞ்சம் இஞ்சி, மிளகு, சீரகம் போட்டு நல்ல கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டினாள். அவள் சொர்னத்தின் உதவியை எதற்குமே எதிர் பாக்கவில்லை. நேஹா என்ன செய்கிறாள் என்றே தெரியாமல் குழம்பி போய் நின்றால் சொர்னம். அனாலும் அவளுடைய சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை, அறிவு இதையெல்லாம் பார்த்து ஸ்தம்பித்து போனாள்.  அப்பா, அம்மா இருவருமே வேலைக்கு போகிறார்கள் அனாலும் இவ்வளவு பொறுப்பா வளர்த்து இருக்கங்களே, நாம ரேவதிக்காக வேலையெல்லாம் விட்டுட்டு இருந்தும் அவளை பொறுப்பாக வளக்க முடியலையே என்று அவளுக்குள் பொலம்பி கொண்டிருந்தாள். 
"ஆன்ட்டி கொஞ்சம் அச்சிவெல்லம் மட்டும் கொடுங்க, எனக்கு கண்டு பிடிக்க முடியல"
"இதோ தரேன்மா"
வெல்லத்தை இடித்து, கொதிக்க வைத்த தன்னீரில் கரைத்து கசாயம் செய்தாள். கொஞ்சம் கசாயத்தை டம்ளரில் நிரப்பி எடுத்துக்கொண்டு பாட்டியிடம் சென்றாள்.
"பாட்டி நான் ரேவதியோட தோழி, இந்தாங்க மொள்ள எழுந்து இந்த கஷாயத்தை குடிங்க, நாலு நாள் குடிச்சா இருமல் சுத்தமா நின்றுவிடும்" கைத்தாங்கலாக உட்காறவைத்து கொஞ்சம் கொஞ்சமாக கசாயத்தை குடிக்க வைத்தாள்.
"ம்ம்ம், ம்ம்ம்" பாட்டிக்கு பதில் சொல்ல கூட முடியாமல் கண்ணீரிலேயே தன் நன்றியை தெரிவித்தாள்.  
 "என்ன பாட்டி காரமா இருக்கா, வீரியம் கூட இருந்தால் தான், மருந்து நல்லா வேலைசெய்யும், கொஞ்சம் கஷ்ட பட்டு குடிங்க பாட்டி"
இல்லைமா!! எனக்கு காரத்தையும், கஷ்டத்தையும் தாங்கும் சக்தி என் கணவர் நிரந்தரமாக பிரிந்தபோதோ,  என் மகன் முதியோர் இல்லத்தில் விட்ட போதோ   பழகிக்கொண்டேன். ஆனால் நீ செலுத்தும் அன்பை தாங்க எனக்கு சக்தி எனக்கு இல்லைமா என்று சொல்லணும் போல தோன்றியது, கண்ணீர் மட்டுமே பேசியது.

நேஹா மொள்ள பாட்டியை படுக்க வைத்துவிட்டு சர்வ சாதாரணமாக சொர்னதிடம் டம்ளரை கொடுத்தாள்
"ஆன்ட்டி, உங்களுக்கு நிறைய வேலை இருக்குமேன்னு தான் நாலு நாளைக்கு தேவையான கசாயத்தை செய்து வச்சுருக்கேன், நீங்க குளிர்பெட்டியில் வைத்து, தினமும் சுட வச்சு பாட்டிக்கு கொடுங்க"

சொர்னத்திற்கு நேஹாவின் மீது இருந்த ஆச்சர்யம் கொஞ்சகொஞ்சமாய் விலகி தன் மேல் தனக்கே ஒரு வெறுப்பு தோன்றியது. அதை மறைப்பதற்காக   ஏதேதோ பேசினாள்.
"நான் வேலையெல்லாம் முடிச்சிட்டு சுடுதன்னி தரலாம்ன்னு இருந்தேன், அதுக்குள்ள நீ கசாயமே வச்சுட்ட. தப்பா நெனச்சிக்கதம்மா என்னக்கு ஒரு வேல தான் ஒரு சமயத்துல செய்ய வரும், மாவு அரச்சிகிட்டே இத செய்ய தோனல."   

இதை சட்ரும் எதிர் பாக்காத நேஹா "ஆன்ட்டி, ஆன்ட்டி, நான் உங்களை குத்திக்காட்டுவதற்காக இதை செய்ய வில்லை, எனக்கு தோணினதை செஞ்சேன். அது மட்டும் இல்ல நீங்க செஞ்ச நல்லதோட நான் செஞ்சது ஒன்னுமே இல்ல. நான் உங்க சேவைக்கு ஒரு துரும்பை தான் கிள்ளிப்போட்டேன். தயவு செஞ்சி இதுக்காக நீங்க இவ்ளோ யோசிக்காதீங்க" 

சொர்னத்துக்கு ஒன்னுமே புரிய வில்லை. இவள் வீட்டு வேலை செய்வதையா இவ்ளோ பெரிய விஷயமா சொல்றா. கேட்டு தெரிஞ்சிக்கணும்னு ஒரு முடிவுக்கு வருவதற்குள் நேஹா தொடர்ந்தாள்.
"இன்னைக்கு கல்லூரியில் ஆசிரியர் ரேவதிக்கிட்ட உங்களுக்கு மறக்க முடியாத தருணம் என்னனு கேட்டாங்க, அப்போ அவ சொன்னத கேட்ட போது உங்கமேல ஒரு தனி மரியாதை தோன்றியது, உடனே உங்கள பாத்து பாராட்டணும்னு நினைத்தேன், நீங்க ரொம்ப நல்லவங்க ஆன்ட்டி."   
"ரேவதியா! என்ன பத்தியா! என்னமா சொன்னா?" சொர்னத்திற்கு பதில் கேட்க்க கூட பொறுமையில்லை. என்ன சொல்லி இருப்பா நான் அவளுக்காக வேலையே விட்டுவிட்டு, பொழுதுபோக்கு இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருப்பாளோ...
நேஹா சொர்னத்தின் முகத்தில் விழும் சுருக்கத்தை வைத்து கேள்வியை புரிந்து கொண்டாள் "நீங்க செஞ்ச விஷயம் உங்களுக்கு பெருசாவே தெரியலயா. நேற்று நீங்க யாருன்னே தெரியாத இந்த பாட்டியை தத்தெடுத்தது பற்றித்தான் சொன்னேன். எனக்கு தெரிஞ்சி குழந்தை இல்லாதவர்கள், தன்னுடைய ஏக்கத்தை போக்க, தன்னுடைய சந்தோஷத்திற்காக, தன்னோட சொத்துக்காக தத்தெடுப்பாங்க. ஆனால் நீங்கள் எவ்வளவு பெரிய மனசு இருந்தா காஞ்சு சருகாகப்போற ஒரு செடிக்கு தன்னி ஊற்றி உயிர் கொடுத்துருக்கீங்க. நிச்சயமா குத்தமே சொல்ல முடியாத ஒரு தாய் மனம் உங்ககிட்ட இருக்கு. என்னால இவ்ளோதான் வார்த்தையால சொல்ல தெரியும்." இதை சொல்லும் போது நேஹாவின் கண்கள் கலங்கி விட்டது.

சொர்னத்திற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையில் இருந்த அர்த்தம் உணரவே சற்று நேரம் ஆகும்போல தோன்றியது. "நீ எப்படிமா இவ்ளோ பொறுப்பா இருக்க, உன்னோட கனிவான பேச்சு, உதவிசெய்யனும்கற துடிப்பு, இதெல்லாம் பார்த்தா உங்க அப்பாவும் அம்மாவும் எவ்ளோ அக்கறையோட உன்ன வளத்துருப்பங்கன்னு தெரியுது"
"ஐயோ ஆன்ட்டி, எனக்கு ஒன்னும் நான் பொறுப்பான பொண்ணு மாதிரியெல்லாம் தெரியல"
"அனால் ரேவதியோட உன்ன பார்த்தா நிறைய வித்தியாசம் தெரியுது"
"அப்படியெல்லாம் இல்ல ஆன்ட்டி, இருந்தாலும் உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி, அனால் நீங்க சொன்ன மாதிரி நான் இப்படி இருக்கரதுக்கு ரொம்ப முக்கியமான கரணம் என் பாட்டி. என் பெற்றோர்கள் வேலைக்கு போறதுனால என் பாட்டி தான் என்ன கஷ்டப்பட்டு வளத்தாங்க, சின்ன சின்னதா நான் செய்த தவறுகளுக்கு கூட பெரிய பெரிய கதை சொல்லி என்ன திருத்துவாங்க. என் பாட்டி எனக்கு சொல்லி கொடுக்கும் ஒவ்வொரு விளையாட்டும் ஒரு நல்ல பண்பை சொல்லி கொடுக்கும். என்னோட அம்மாவும் என் பாட்டிக்கு முழு சுகந்திரத்தையும் கொடுத்து வளக்க உதவி செஞ்சாங்க. "
"பாட்டியா !!!"
"அமாம் ஆன்ட்டி பாட்டியே தான், எங்க அம்மா வேலையை விட்டு பாத்துகிட்டா  பணத்துக்கு கஷ்ட படனும், அதனால என் பாட்டி எங்க குடும்பத்துக்கு உதவியா கூடவே இருந்துட்டாங்க. நீங்க ஒன்னும் கவலை படாதீங்க உங்களோட ரேவதியும் கொஞ்ச நாள்ல மாறிடுவா "
"ஏன்மா நீ மாத்திடுவியா" 
"கிண்டல் பண்ணாதீங்க ஆன்ட்டி, அதான் நீங்க இந்த பாட்டிய தத்தெடுத்திருக்கிறீங்கலே, இனிமே அவுங்க பாத்துப்பாங்க. நீங்க உங்க வேலையை பாத்தா அவுங்க ரேவதிய பாத்துப்பாங்க, கவலபடாதீங்க."

பேசிக்கொண்டே மணியை பார்த்தாள் நேஹா "அய்யய்யோ நேரம் ஆயிடுச்சு, நான் அம்மா கிட்ட ஒருமணி நேரத்துல வரேன்னு சொன்னேன், நான் கெளம்புறேன் ஆன்ட்டி நீங்க கட்டாயம் எங்க வீட்டுக்கு வாங்க. " 
"கயல் வா போகலாம்"
"இதோவந்துடேன் டி"
"ரேவ் டாட்டா, பாட்டி வரேன், ஆன்ட்டி டேக்கேர் " என்று சொல்லிவிட்டு  பரபரப்பாய் கிளம்பினாள் நேஹா.

இருவரையும் வழியனுப்பிவிட்டு வந்து அமர்ந்த சொர்னத்திற்கு நேஹா விட்டு சென்ற வார்த்தைகள் திரும்ப திரும்ப ஒலித்தது. அவள் மனமே அவளை நையாண்டி செய்வதை உணர்ந்தாள். அவள் மகள் எதுவும் உணராதவளாய்  இருப்பது இன்னும் கோபத்தை மூட்டியது. அவளை குத்தம் சொல்லி என்ன பலன் நாம் வளர்த்ததில் குற்றம். நாமலே சரியாய் இல்லாத போது அவளைசொல்லி என்ன பலன். அவள் நேற்று இரவு தன் கணவனிடம் சாமி ஆடியதை நினைக்காமல் இருக்க முடியவில்லை "என்னயா மனுஷன் நீ, என்கிட்ட என்ன சொல்லி கூட்டிட்டு போன. உங்க அம்மா இங்க வந்தா அவுங்க எல்லா வேலையும் பாத்துப்பாங்க நீ உக்காந்து டிவி பாக்கலாம், ஏற்கனவே நீ ரொம்ப கஷ்ட்ட பட்டுட்ட அவுங்க வந்தா கொஞ்சம் ஒய்வு எடுக்கலாம் அது இதுன்னு சொன்ன, முதியோர் இல்லத்துக்கு போனாதானே தெரியுது உன்னோட களவானி தனம். அவுங்களால இதுக்குமேல பாத்துக்க முடியாதுன்னு தொரத்திவிடராங்கன்னு. நீ எவ்வளோ பெரிய ஆளுயா, என்னையே ஏமாத்துற."
"நான் சொன்னதுல என்னடி தப்பு, அவுங்க சரியானோன உடனே அவுங்க நீ கற்பமா இருந்த போது பாத்துகிட்ட மாதிரி கட்டாயம் பாத்துப்பாங்க"
"என்னய்யா குத்தி காமிக்கிறியோ, அது எப்போ உக்காந்து, நான் எப்போ வேலவாங்கறது. ஒழுங்கா உன் தம்பி கிட்ட போயி விட்டுட்டுவா " அவள் நினைவுகள் இருமல் சத்தத்தில் கலைந்தது, அவளையும் மீறி "இதோ தன்னி எடுத்துட்டு வரேன் அத்தை" எழுந்து சென்று தன்னி கொடுத்தால் சொர்னம்.
"உனக்கு ஏம்மா என்னால கஷ்டம், இப்படியே விட்டுட்டா இந்த கட்டை முதியோர் இல்லத்தில் அனாதை பிணமாக சாகாமல் என் பையன் வீட்டில் பெருமையுடன் சாகுமே. " என்று பாட்டி தழுதழுக்க தன் கடைசி ஆசையை சொல்லி முடித்தாள்.

இறுகிய கோழி முட்டையின் ஓடை உடைத்துக்கொண்டு உயிர் பெற்று வரும் குஞ்சு போல சொர்னத்தின் ஆணவத்தை துண்டு துண்டாய் உடைத்துக்கொண்டு கண்ணீர் வெளிவந்தது.  கைகள் கண்ணீரை துடித்தாலும் குரல் நடுங்குவதை தவிர்க்க முடியவில்லை "அத்த்த்ததத.. உள்ள வந்து படுங்க".





No comments:

Post a Comment