Tuesday 7 June 2011

என் மகளை பிரிந்திருந்த போது உதித்தது


பாசம் ,    ' பற்று  இவையெல்லம் உயிர் என்றேன்,  
பண‌ம் '  அது வெறும் உடல் என்றேன் (பித்துப்பிடித்தவள்). 

நானே உலகம் என என் கால்களைக் கட்டிக் கொண்டே விளையாடிய என் குழந்தையின் பாசத்தை,
அவளைப் பார்த்துக் கொண்டே இருப்பது தான் என் உலகம் என்று வாழந்த என்னுடைய பற்றையும்,
சொற்ப/ஆதரவான‌ மாத சம்பள‌த்திற்காக விட்டுக் கொடுத்தேனே, ஆமாம்;
விட்டுவிட்டு வந்தேனே அவளை என் மாமியார் வீட்டில்.

"உயிர் வாழ உடல் வேண்டும் அல்லவா இந்த வயதில் தான் புரிந்தது எனக்கு."




சட்டை கலைவது அழகா?
கலைக்கும் மகள் இல்லாத பொழுது தான் தெரிந்தது எனக்கு!

சிதறிய சாமான்கள் சித்திரமா?
தூக்கி போட்டுவிட்டுச் சிரிக்கும் பிஞ்சு முகம் இல்லாத போது புலப்பட்டது!

க‌த்துவ‌தும் ர‌சிக்க வேண்டிய‌ லையா‌!
நான் பேசிய‌தை என‌க்கே திருப்பி சொன்ன‌ வெறுமை வீடு உணர்த்திய‌து!

உப‌த்திர‌ம் செய்வ‌து ந‌ல்ல‌தா?
ஒன்றை உடைத்து, ஒன்றைக் கொடுத்துச் ச‌மைக்கும் போது உப‌த்திர‌ம் செய்ய‌ நீ இல்லாத‌ பொது புரிந்த‌து!

இத்த‌னையும் உணர்த்திய பிரிவும் ந‌ல்ல‌தே!
பொருமையை கற்றுக் கொடுத்த‌ வில‌‌க‌லும் ந‌ல்ல‌தே!

No comments:

Post a Comment